search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் தேங்காய் விலை உயர்வு
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் தேங்காய் விலை உயர்வு

    திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தி குறைந்துள்ளதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் கடுமையான வறட்சி நீடித்து வருவதால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் செம்பட்டி, அய்யம்பாளையம், பட்டி வீரன்பட்டி, வத்தலக்குண்டு, பழனி, நத்தம் ஆகிய பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மழை இல்லாததாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் தென்னை விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

    இதனால் தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. தேங்காய் என்பது பொதுமக்களின் அன்றாட தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது உற்பத்தி குறைந்துள்ளது மேலும் வெளி மாவட்டங்ளில் இருந்து வரும் தேங்காய்களும் வரவில்லை. இதனால் தேங்காய்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    4 மாதங்களுக்கு முன்பு 3 ரூபாய்க்கு விற்ற சிறிய அளவுள்ள தேங்காய் தற்போது ரூ.7-க்கும் நடுத்தர காய் ரூ.7-ல் இருந்து 15 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 10 ரூபாய்க்கு விற்பனையான பெரிய அளவுள்ள தேங்காய் தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தேங்காய் பயன்படுத்துவதை குறைத்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே தென்னை மட்டுமின்றி மற்ற விவசாயமும் செய்ய முடியும். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் வருங்காலங்களில் மழை பெய்தால் மட்டுமே தேங்காய் செழிப்பாக விளையும். வறட்சி நீடித்தால் தேங்காய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தென்னை விவசாயமும் அடியோடு பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்றனர்.

    Next Story
    ×