search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம்: மத்திய அரசு திட்டத்துக்கு நாராயணசாமி எதிர்ப்பு
    X

    காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம்: மத்திய அரசு திட்டத்துக்கு நாராயணசாமி எதிர்ப்பு

    காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை வாயு எடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. இதுபோன்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த திட்டத்தில் புதுவை அரசுக்கு உடன்பாடு இல்லை. ஹைட்ரோ கார்பன் இயற்கை வாயு எடுக்கும் திட்டத்தை ஏற்க முடியாது. மேலும் மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.


    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப் பட்டதை கண்டித்து தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்று இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை வெளியேற்றி விட்டு வாக்கெடுப்பு நடத்தியது சரியல்ல.

    நீட் தேர்வில் இருந்து புதுவை மாநிலத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட முன்வரைவு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். பன்றிக்காய்ச்சலை தடுக்க கபசுரநீர் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Next Story
    ×