search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை ஜெயிலில் மீண்டும் செல்போன் நடமாட்டமா?: ரவுடிகள் பேசியதாக தகவல்
    X

    புதுவை ஜெயிலில் மீண்டும் செல்போன் நடமாட்டமா?: ரவுடிகள் பேசியதாக தகவல்

    புதுவை ஜெயிலில் மீண்டும் செல்போன் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் மூலம் சமூக விரோதிகள் பேசியதாக தகவல்.

    புதுச்சேரி, பிப். 17-

    புதுவை ஜெயிலில் இருக்கும் பிரபல ரவுடிகள் அங்கிருந்து செல்போனில் பேசி புதுவை தொழில் அதிபர்கள், வியா பாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

    அப்போது புதுவை கவர்னராக இருந்த வீரேந்திர கட்டாரியா கடும் நடவடிக்கை எடுத்து ரவுடிகளின் இந்த செயல்பாட்டை முற்றிலும் முடக்கினார். ஜெயில் அருகே இருந்த செல்போன் டவரும் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் பிறகு ஜெயிலில் இருந்து டெலிபோனில் ரவுடிகள் பேசுவது நின்றது.

    இந்த நிலையில் ஜெயி லில் இருந்த பிரபல ரவுடி ஒருவர் போலீஸ்காரரின் செல்போன் மூலம் புதுவை தொழில் அதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது.

    சமீப காலமாக மீண்டும் ஜெயிலில் இருந்து ரவுடிகள் செல்போனில் பேசுவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் இப்போது ரவுடிகள் ஜெயி லில் இருந்து பேசுவது உறுதியாகி இருக்கிறது.

    நேற்று முன்தினம் மடுவுபேட்டை சேர்ந்த ரவுடி முரளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுந்தர் உள்பட பலரை தேடி வருகிறார்கள்.

    சுந்தர் சமீபத்தில் யார்- யாருடன் டெலிபோனில் பேசினார் என்பது பற்றி அறிய அவரது செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு காலாப்பட்டு ஜெயில் உள்ள பகுதியில் இருந்து பல முறை போன் வந்துள்ளது.

    அதாவது ஜெயிலில் இருந்து யாரோ பேசி இருப்பது தெரிய வந் துள்ளது. எனவே, ஜெயிலில் மீண்டும் செல்போன் நட மாட்டம் இருக்கலாம். அங்கிருந்து ரவுடிகள் சுந்தருக்கு பேசி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    முரளி கொலைக்கும், ஜெயிலில் இருந்து பேசிய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீ சார் கருதுகின்றனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வரு கிறார்கள்.

    ஜெயிலில் கைதிகளிடம் செல்போன் இருக்கிறதா? என்பதை கண்டறிய போலீசார் சோதனை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×