search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர சிவன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
    X

    வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர சிவன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

    கோவை வெள்ளியங்கிரியில் 112 அடி உயர சிவன் சிலைமுகத்தை பிரதிதஷ்டை செய்துள்ளனர். வருகிற 24-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    கோவை ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி திருவிழாவின் ஒரு அம்சமாக ஆதியோகி திருவுருவம் திறக்கப்படவுள்ளது.

    ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி கொண்டாட்டங்கள் தமிழகம் மற்றும் தேசம் முழுவதும் ஈஷா தன்னார்வ தொண்டர்களால் அவரவர் ஊர்களிலே நடத்தப்பட்டு பொதுமக்கள் அங்கேயே கலந்து கொள்வது வழக்கம்.

    ஆனால் இந்த வருடம் வரலாற்று சிறப்புமிக்க ஆதியோகி சிவனின் பிரதிஷ்டையை நேரில் அனுபவித்து சக்தியை உணர்வதற்காக அனைவரையும் சத்குரு ஈஷா யோகா மையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்காக வெள்ளியங்கிரியில் 112 அடி உயர சிவன் சிலைமுகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.  24-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    வருகிற 24-ந் தேதி மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்கு நிறைவடையும். சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், சத்குருவின் அருளுரை, கைலாஷ் கேர், ராஜஸ்தான் ரூட்ஸ், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மற்றும் நிருத்தருத்யா நாட்டிய குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளது. அனைவருக்கும் ‘மஹா அன்னதானம்’ வழங்கப்படும்.

    மஹாசிவராத்திரி இரவன்று நிலவும் கோள்களின் நிலைப்பாட்டால் மனிதஅமைப்பின் சக்திநிலையில் இயற்கையாகவே ஆற்றல் மேல்நோக்கி எழும்புகிறது. ஒருவர் அன்றைய இரவு முழுவதும் விழிப்புணர்வான நிலையில் முதுகுத் தண்டை நேராக இருத்திகண் விழித் திருப்பாரேயானால், அவர் உடல் மற்றும் உள்நிலையில் முழுமையான நலனைபெற முடியும்.

    ஆதியோகியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு கூறும் பொழுது “உலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு அற்ற நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், விழிப்புணர்வுடன் தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்றுமிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இறந்த பிறகே செல்லக்கூடிய, கற்பனை சொர்க்கத்தை அடைய விரும்புபவர்களாக, அடுத்த தலைமுறையினர் இருக்கக்கூடாது.

    உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக் கூடியதாக மாறும். இன்று பெரும்பான்மையான மனிதர்களுக்கு, பல்தேய்ப்பது தெரிந்திருப்பது போல, தங்களை எப்படி அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களுக்குத் தங்கள் உடலையும், மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது நிகழ்ந்தால், மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாகவும், சாத்தியமாகவும் மாறுவார்கள்.” என்றார்.

    நம்பூமிசுழன்று கொண்டே இருப்பதால் ஒருமைய விலக்கு விசையை உருவாக்குகிறது. இந்த விசைசக்தி 11டிகிரி அட்சரேகையில் உச்சமாக இருந்து 33 டிகிரிவரை நல்லநிலையில் இருக்கிறது.

    குறிப்பாக 11 டிகிரியில் 100 சதவிகிதம் செங்குத்தாக செயல்படுகிறது.ஈஷா யோகா மையம் அட்ச ரேகை 11டிகிரியில் அமைந்திருப்பதால், மஹா சிவராத்திரியன்று அங்கு இருப்பது மிக சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

    Next Story
    ×