search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது - நாராயணசாமி
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது - நாராயணசாமி

    சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை புதுவை சட்டசபை வளாகத்துக்கு காரில் வந்தார். அதே நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறிய தகவல் வெளியானது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து நாராயணசாமி கூறியதாவது:-

    சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. கர்நாடகா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து கீழ்கோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் முழு விவரம் இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மட்டுமே செய்ய முடியும். மேல்முறையீடு செய்ய முடியாது. தேர்தல் விதிமுறை மற்றும் சட்ட விதிமுறைபடி சசிகலா முதல்-அமைச்சர் பதவி ஏற்க முடியாது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டம் படித்து வக்கீல் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×