search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ரெயில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது
    X

    மதுரையில் ரெயில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது

    மதுரை அருகே செல்லூரில் 5 நாட்களாக நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிட்டுள்ளனர்.
    மதுரை:

    ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னிச்சையாக போராட்டம் வெடித்தது. மாணவர்களும், இளைஞர்களும் வீதிகளுக்கு வந்து போராடி வருகிறார்கள்.

    மதுரை, சேலம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.ரெயில்களுக்கு முன்பாக தண்டவாளத்தில் இரவு பகலாக படுத்து கிடந்து நடத்தி வரும் இந்த எழுச்சி போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து கடுமையாக முடங்கியது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்செந்தூர், திருச்சி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாட்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை.

    அதுபோல அங்கிருந்தும் எழும்பூருக்கு ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் தென் மாவட்ட பகுதிகளுக்கு ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர திருச்சி, மதுரை, கோவை, சேலம், பெங்களூர், விழுப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் மதுரை செல்லூர் அருகே தொடர்ந்து 5 நாட்களாக ரெயிலை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று தங்களது போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். முன்னதாக இன்று காலை மதுரையில் ரெயிலை சிறைப்பிடித்து வைத்திருந்த போராட்டக்காரர்களிடம் இருந்து ரெயில்களை ரெயில்வே போலீசார் மீட்டனர்.

    இதனால் ரெயில் போக்குவரத்து இன்றுமுதல் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×