search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணிக்கு உதவுங்கள்: கலெக்டர் வேண்டுகோள்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணிக்கு உதவுங்கள்: கலெக்டர் வேண்டுகோள்

    ஜனவரி 25-ம் தேதி வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதுடன் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தம் மற்றும் பெயர் சேர்த்தல் தொடர்பான பணிகளுக்கு மக்கள் உதவ வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
    திருச்சி:

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்தாக வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன் வாக்களிக்க தயார் என்பேன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    18 வயதுடைய அனைவரும் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டியது கடமையாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயது நிறைவடைந்தால் போதுமானது. அனைத்து பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளிலும் ஜனவரி 25-ந்தேதியை வாக்காளர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

    அன்றைய தினம் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான படிவங்களை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்வதுடன் ஊக்குவிக்க வேண்டும்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் வரும் 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பதுடன் பல்வேறு போட்டிகளில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.
    Next Story
    ×