search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரீனாவை இனி, ‘தமிழர் கடற்கரை’ என அழைக்க வேண்டும்: மாணவர் பேட்டி
    X

    மெரீனாவை இனி, ‘தமிழர் கடற்கரை’ என அழைக்க வேண்டும்: மாணவர் பேட்டி

    மெரீனாவை, தமிழர் கடற்கரை என அழைக்க வேண்டும் என்று தமுக்கம் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் தெரிவித்தார்.

    மதுரை:

    ஜல்லிக்கட்டு நடை பெற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அதனை ஏற்க போராட்ட களத்தில் இருக்கும் மாணவ -மாணவிகளும், இளைஞர் கூட்டமும் மறுத்துவிட்டது. வேண்டும் வேண்டும் நிரந்தர சட்டம் வேண்டும். வேண்டாம் வேண்டாம் அவசர சட்டம் என கோ‌ஷமிடும் அவர்கள் அனைத்து பகுதிகளிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தே வருகின்றனர்.

    மதுரை தமுக்கத்தில் 6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது. நாளுக்குநாள் இளைஞர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தே வருகிறது. வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து பங்கேற்று வருகின்றனர்.

    சங்கு ஊதி எதிர்ப்பினை தெரிவிக்கும் போராட்டக்காரர்கள்.

    சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், நாம் அனைவரும் ஜல்லிக்கட்டுக்காக ஒன்றினைந்துள்ளோம். இது போன்ற கூட்டத்தை எப்போதாவது கண்டதுண்டா? இது எதற்காக? நம் கலாச் சாரத்தை பாதுகாக்க.

    சென்னை மெரீனா கடற்கரையில் திரண்டிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது, இனி இதனை ‘தமிழர் கடற்கரை’ என அழைக்க வேண்டும். இப்படி ஒரு எழுச்சி போராட்டம் நடந்துள்ளதற்கு காரணம், தமிழ் இனம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தான்.

    1957-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய பெரியார், வடநாட்டுக்காரன் நம்மை ஏமாற்ற இருக்கிறான். நம்மால் தனித்து இயங்க முடியாதா? என்றார். ஜல்லிக்கட்டை நடத்த இவர்கள் யார்? கடந்த 6 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

    நான் சென்னை போராட்டத்திலும் பங்கேற்றேன். மெரீனாவில் பெண் தோழர்கள் இரவில் தனித்திருந்ததை பார்க்கும் போது நமது போராட்டம் வலுப்பெற்றதை காண முடிந்தது.

    தமிழ் கலாச்சாரத்தை காக்க நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார்.

    Next Story
    ×