search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
    X

    ஈரோடு மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு

    ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
    ஈரோடு:

    தமிழர்களின் பாரம்பாய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தொவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    ஈரோடு மணிகூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, மற்றும் கடை வீதி, பிருந்தாச்சாரி வீதி போன்ற பகுதிகளில் கடைகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இன்று இப்பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தால் இந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது .

    ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐடி.யு. எல்.பி. எப். ஐ.என்.டி.யு.சி. எச்.எம்.எஸ். போன்ற தொழிற்சங்கங்கள் இன்று பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக அறிவித்து உள்ளன.

    இதனால் ஈரோட்டில் இன்று ஆட்டோக்கள், டாக்சிகள், வேன்கள் ஓடவில்லை.

    ஈரோடு கனி மார்க்கெட்டில் இயங்கும் அனைத்து ஜவுளி கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தன.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் சுமார் 1500 லாரிகள் இன்று ஓடவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 40 தியேட்டர்களில் இன்று காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இது பற்றிய அறிவிப்பு தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டு உள்ளன.

    அரசு -தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் வழக்கம் போல ஓடின. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தொவித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு இருந்தது . அரசு பள்ளிகள் செயல்பட்டன. ஆனால் குறைந்த அளவே மாணவ -மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து இருந்தனர்.

    இதுபோல கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி, அந்தியூர் , பவானி மற்றும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

    இங்கு கார்கள், வேன்கள்-டாக்சிகளும் ஓடவில்லை.

    சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட சேம்பர் செங்கல் உற்பத்தி யாளர்கள் 20ந்தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
    Next Story
    ×