search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: பா.ம.க. அறிவிப்பு
    X

    புதுவையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: பா.ம.க. அறிவிப்பு

    புதுவையில் வரும் காலங்களில் தை மாதத்தில் பா.ம.க. சார்பில் கிராம பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று பா.ம.க. மாநில செயலாளர் கோபி கூறினார்.

    புதுச்சேரி:

    பா.ம.க. மாநில செயலாளர் கோபி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதை தடுக்க வாய் மூடி மவுனியாக இருந்து விட்டு தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பது போன்று பாசாங்கு காட்டுகிறார்கள். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தி.மு.க. உறுதியாக இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி இருக்கலாம்.

    ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்திய போது, பெரிய கடை போலீசார் கண் மூடித்தனமாக இளைஞர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தற்போது புதுவையில் ஒட்டு மொத்த மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் நடத்தி வரும் போராட்டத்துக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பெண் போலீசை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

    புதுவையில் வரும் காலங்களில் தை மாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிராம பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு பாதுகாக்க தமிழ் உணர்வாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×