search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பேட்ஜ் அணிந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
    X

    கருப்பு பேட்ஜ் அணிந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள். மாலை பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஜல்லிகட்டு போராட்டம் குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் கூறியதாவது:-

    “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியை பார்த்து வியந்து போய் நிற்கின்றோம்.

    போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தனியார் பள்ளிகளும், தங்களது பங்களிப்பை கொடுக்க முன் வருகின்றன.

    தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை அந்தந்த பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

    இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்“ என்றார்.
    Next Story
    ×