search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் பகுதியில் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
    X

    ஓசூர் பகுதியில் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டில் முதல் பண்டிகை விழாவாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பண்டிகை விழாவை முன்னிட்டு, பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ண,வண்ண கோலமிட்டு தைத்திருநாளை வரவேற்றனர். மேலும், புதுப்பானையில் பொங்கலிட்டும், கரும்பு, காய்கறிகள், பழங்கள், மஞ்சள் கிழங்கு.. ஆகியவற்றை படைத்து, சூரிய பகவானை வழிபட்டனர். அப்போது, பொங்கலோ, பொங்கல்.. என உற்சாகமாக குரல் எழுப்பினார்கள். பின்னர் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று கடவுளர்களை வழிபட்டனர். மேலும், அன்பும், நட்பும், ஒற்றுமையும் நிலைத்து நிற்கும் வகையில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரஸ்பரம் இனிப்புகளை பறிமாறிக்கொண்டனர்.

    ஓசூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கே. திம்மராஜ் தலைமை தாங்கினார். கெளரவ தலைவர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் மூர்த்தி ரெட்டி அனைவரையும் வரவேற்றார். இதில், ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் மாதேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    விழாவின்போது, புதுப்பானையில் பொங்கல் பொங்க வைத்து, சூரிய பகவானுக்கு படைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் இதில் முரளி, யாசின், பாத்திமா மேரி, மஞ்சுநாத், சோமசேகர், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×