search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்
    X

    பொதுமக்கள் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

    பொதுமக்களிடையே பணத்தாள் இல்லா பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அன்னவாசலில் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பி.எஸ்.எம் திருமண மண்டபத்தில் நபார்டு வங்கி, ஜி.வி.என் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய நிதிசார் கல்வி விழிப்புணர்வு மற்றும் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் மாவட்டகலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து பேசியதாவது:-

    பொதுமக்களிடையே பணத்தாள் இல்லா பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசலில், விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு முகாமின் நோக்கம் பொதுமக்கள் அனைவரும் சிறுசேமிப்பின் முக்கியத்துவத்தினை உணர வேண்டும் என்பதே ஆகும். எந்த ஒரு குடும்பமும் வாழ்க்கை சுழற்சிக்கு ஏற்ப திட்டமிட்டு சேமிக்கிறதோ, அந்த குடும்பமே வளர்ச்சியை நோக்கி செல்லும்.

    கிராம மக்கள் தனியார் நிதிநிறுவனங்களின் அதிகப்படியான வட்டி கிடைக்கும் என்று ஆசைப்படுவதை தவிர்க்க வேண்டும். ஏழை எளிய மக்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்க வேண்டும். தங்களின் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு, சரியான சிறு தொழில் திட்டத்துடன் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலுள்ள வங்கி மேலாளரை அணுகி சிறுகடன் பெறலாம்.

    வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் பெற்ற சிறுகடனை, சரியான நேரத்தில் வங்கிக்கு திருப்பி செலுத்தும் போது, தங்களின் சிறுதொழிலை விரிவுபடுத்தும் வகையில் மேலும் வங்கிக்கடன் பெறலாம். மேலும், சரியாக கடனை திருப்பி செலுத்தும் நபர்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் வட்டியில்லா பயிர்க்கடன்களை கொடுக்கிறது. கிராம மக்கள் பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக, பணமில்லா பரிவர்த்தனை செய்திட பொதுமக்களாகிய நீங்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் கணேஷ் பேசினார்.

    Next Story
    ×