search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூடப்பட்டுள்ள ஏ.டி.எம்.கள் எப்போது திறக்கப்படும்?
    X

    மூடப்பட்டுள்ள ஏ.டி.எம்.கள் எப்போது திறக்கப்படும்?

    சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் மூடப்பட்டு கிடக்கும் ஏ.டி.எம்.கள் எப்போது திறக்கப்படும் என்று தினம், தினம் ஏக்கத்தோடு பொதுமக்கள் பார்த்து செல்கிறார்கள்.
    சென்னை:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்பு உள்ள ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

    வங்கிகளில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடிக்கிடப்பதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் ரூ.2 ஆயிரம் நோட்டு மட்டும் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் ரூ.4 ஆயிரத்து 500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் பணத்தட்டுப்பாடு ஓரளவு தீரும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    ஆனால் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடியே கிடக்கின்றன. திறந்து இருக்கும் ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

    சில ஏ.டி.எம்.களில் மட்டும் புதிய ரூ.500 நோட்டுகள் கிடைப்பதால் பெரும்பாலான வாடிக்கையாளருக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது.

    இதனால் மூடப்பட்டு கிடக்கும் ஏ.டி.எம்.கள் எப்போது திறக்கப்படும் என்று தினம், தினம் ஏக்கத்தோடு பார்த்து செல்கிறார்கள். மூடிக்கிடக்கும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×