search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரியில் களை கட்டிய புத்தாண்டு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    நீலகிரியில் களை கட்டிய புத்தாண்டு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    நீலகிரியில் புத்தாண்டை கொண்டாட உள்ளூர் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஊட்டி:

    உலகம் முழுவதும் 31-ந்தேதி நள்ளிரவு 2017-ம் ஆண்டை வரவேற்க புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. புத்தாண்டை கொண்டாட நீலகிரியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஊட்டியில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருவதாலும் இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வன விலங்குகள் மற்றும் பறவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, முதுமலை, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

    புத்தாண்டையொட்டி ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்கள் வண்ண விலங்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு நிகழ்ச்சிக்காக பல்வேறு இடங்களில் கேளிக்கை நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொண்டாட்டத்தின்போது அத்துமீறுபவர்களை கண்காணிக்க போலீசார் தயார் நிலையில் உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. அதிவேகமா வாகனம் இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×