search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாநகராட்சியில் 19, 20-ந் தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    மதுரை மாநகராட்சியில் 19, 20-ந் தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    மதுரை மாநகராட்சியில் வருகிற 19 மற்றும் 20-ந் தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கமி‌ஷனர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சியில் கமி‌ஷனர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வைகை 2-ம் கட்ட குடிநீர்திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அரசரடி நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குழாய்களை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.

    மேலும் அருள்தாஸ்புரம்- ஆரப்பாளையம் பகுதியில் வைகையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் அந்த வழித்தடத்தில் செல்லும் குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. எனவே இந்த பணிகளுக்காக மதுரை வடக்கு பகுதியில் வருகிற 19 மற்றும் 20-ந் தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி வார்டுகள் 27, 33 முதல் 46 வார்டு பகுதிகளிலும், மற்றும் 89 முதல் 92 வார்டுகளிலும் மேற்கண்ட 2 நாட்கள் குடிநீர் வராது. இந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×