search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயல்: துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    வார்தா புயல்: துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    வார்தா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தற்போது அது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் 1090 கி.மீ தொலைவிலும் மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கே தென்கிழக்கில் 1070 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள வார்தா புயல், 12 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வார்தா புயல் மையம் கொண்டுள்தால், தூத்துக்குடி, பாம்பன், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் காற்று மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×