search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: கலெக்டர் தகவல்
    X

    விழுப்புரத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: கலெக்டர் தகவல்

    விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் நோக்குடனும், சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் நோக்குடனும், சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஓட்டுனர் பயிற்சி, கணினி பயிற்சி, கைபேசி பழுதுபார்த்தல் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டு பயிற்சிபோன்ற செயல்திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், முன்னாள் படைவீரர்கள் விருப்பப்படும் இதர பயிற்சிகளையும் தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழகம் (டெக்ஸ்கோ) வழங்கி வருகிறது.

    இந்த பயிற்சிகளுக்கு வரும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு ஆகியவை அளிக்கப்படும். பயிற்சிக்குரிய கட்டணத்தையும் டெக்ஸ்கோ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இந்த பயிற்சிகளை அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் வழியாக டெக்ஸ்கோ நடைமுறைப்படுத்தி வருகின்றது.

    கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் இந்த பயிற்சிகளில் தங்களுக்கு விருப்பமான பயிற்சியில் சேர்ந்து பயனடைய விழுப்புரம் மாவட்ட அனைத்து முன்னாள் படைவீரர்களும் சென்னையில் உள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக பொது மேலாளரை, தபால் மூலமாகவோ அல்லது மின்அஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×