search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் உடலுக்கு ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் அஞ்சலி
    X

    ஜெயலலிதாவின் உடலுக்கு ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் அஞ்சலி

    ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
    சென்னை:

    உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று காலை முதலே தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்களும் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, விமான நிலையத்தில் இருந்து மாலை 4 மணியளவில் ராஜாஜி அரங்கம் வந்து சேர்ந்தார். அங்கு ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் சசிகலாவை பார்த்து வணக்கம் தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார்.

    அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஜெயலலிதா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×