search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
    X

    கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

    ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல தமிழக அரசால் நபர் ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. இந்த பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான்நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த பயணம் வருகிற பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணகாலம் 10 நாட்கள்.

    அதற்கான விண்ணப்பம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணம் இன்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in"B "Bஎன்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் தபால்உறையில் ‘ஜெருசலேம் புனிதபயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807(5-வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு 16.12.2016-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். நேரில் வரவேண்டியதில்லை.

    விண்ணப்பதாரர் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவராகவும், 1.1.2017-ந்தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட்டும் வைத்திருக்க வேண்டும். வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு எவ்வித வில்லங்கமும் இருக்கக்கூடாது. மருத்துவ மற்றும் உடற்தகுதி இருக்க வேண்டும். அரசு தரும் நிதிஉதவி தவிர மீதம் உள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்கவேண்டும். ஏற்கனவே இந்த திட்டத்தில் புனித பயணம் சென்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது.

    ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து 4 பேர் பயணம் செய்யலாம். இதில் 2 வயது குழந்தைகளும் இருக்கலாம். இந்த பயணத்தில் 70 வயது நிரம்பியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவருக்கு துணையாக அவர் விரும்பும் நபரும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார். தேர்வு செய்யப்படும் நபர்களின் பயணத்திற்கான காலம், பயணநிரல் பயணக்குழுவால் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×