search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு இன்று கிருஷ்ணாநீர் வந்தது
    X

    பூண்டி ஏரிக்கு இன்று கிருஷ்ணாநீர் வந்தது

    கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 69 கனஅடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் மிகவும் குறைந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த 9ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதலில் வினாடிக்கு 500 கனஅடி விதம் தண்ணீர் திறந்து விட்டனர். அதன் பின் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 1500 கனஅடியாக திறந்துவிடப்படுகிறது.

    இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று அதிகாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயின்டிற்க்கு வந்தடைந்தது.

    இந்த நிலையில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று காலை தண்ணீர் வந்து சேர்ந்தது. பூண்டி ஏரியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 17. 90 அடியாக பதிவானது (மொத்தம் உயரம் 35 அடி) 104 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறப்பு நேற்று காலை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பேபி கால்வாயில் மட்டும் 30 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 69 கனஅடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.
    Next Story
    ×