search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா பண்ணை மகளிர் குழுவுக்கு நேரடி நெல் விதைப்பு எந்திரம்: கலெக்டர் வழங்கினார்
    X

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா பண்ணை மகளிர் குழுவுக்கு நேரடி நெல் விதைப்பு எந்திரம்: கலெக்டர் வழங்கினார்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தினை மாவட்ட கலெக்டர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தினை சிறப்பாக செயல்ப்பட்டு வரும் அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கி தெரிவித்தாவது

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் 60,000 ஏக்கர் பரப்பில் நடைபெற்று வருகிறது. இதில் இயல்பாக 3000 முதல் 5000 ஏக்கர் வரை நேரடி நெல் விதைப்பு செய்யப்படும்.  தற்போது தமிழக முதலமைச்சர் சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு முழு வீச்சில் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.600- வீதம் மானியம் வழங்கப்படுகிறது. 

    இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் வட்டாரத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமிர்தராயன் கோட்டை அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு, ரூ.58,000- மதிப்புள்ள நேரடி நெல் விதைப்பு இயந்திரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கப்பட்டது. 

    நேரடி நெல் விதைப்பு இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 5 ஏக்கர் வரை விதைப்பு செய்யலாம்.  ஏக்கர் ஒன்றுக்கு விதைப்பு செய்ய குறைந்தபட்ச வாடகையாக ரூ.900- பெறப்படும்.  இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.300- வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1500- வரை நிகர வருமானம் கிடைக்கும்.  இந்த வருமானத்தை அம்மா பண்ணை மகளிர் குழுவினர் தங்களது வாழ்வாதாரத்திற்கும்,  இயந்திரத்தை பராமரிப்பதற்கும் பயன்படுத்திடவும் மேலும் இந்த குழுவின் செயல்பாட்டினை பொறுத்து பிற அம்மா பண்ணை மகளிர் குழுக்களுக்கும் தேவையான வேளாண் கருவிகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்.

    நேரடி நெல் விதைப்பு இயந்திரம் மூலம் நெல் மற்றும் 10 வகையான விதைகளை விதைப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் உரங்களையும் இடலாம்.  எனவே மக்காச்சோளம், சோளம், கம்பு, கடலை, உளுந்து மற்றும் துவரை போன்ற பயிர்களில் ஆண்டு முழுவதும் விதைப்பு செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் போதுமான அளவில் வருடம் முழுவதும் வருமானம் பெற வாய்ப்புள்ளது.

    விவசாயிகள் இயந்திரங்களை பயன் படுத்தி பயன்யடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) சதானந்தம், துணை இயக்குநர் கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
    Next Story
    ×