search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழலில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.28 லட்சம் தப்பியது
    X

    புழலில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.28 லட்சம் தப்பியது

    புழலில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழலை அடுத்த விநாயகபுரம் திருமால்நகர் சூரப்பட்டு சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் மையம் உள்ளது இங்கு காவலாளி இல்லை.

    நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மகும்பல் ஏ.டி. எம் மையத்திற்குள் புகுந்தனர். அவர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைக்க முயன்றனர்.

    லாக்கரை உடைக்க முடியாததால் கோபம் அடைந்த கொள்ளை கும்பல் ஏ.டி.எம் எந்திரத்தை சேதப்படுத்தினர். பின்னர் ஏ.டி.எம் மையத்தின் ‌ஷட்டரை கீழே இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    ஏ.டி.எம் பழுது என நினைத்து வாடிக்கையாளர்கள் யாரும் அங்கு செல்லவில்லை சந்தேகம் அடைந்த கட்டிட உரிமையாளர் ‌ஷட்டரை திறந்து பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும், புழல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாதவரம துணை கமி‌ஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார். விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த ரூ.28 லட்சம் தப்பியது. ஏ.டி.எம் மையத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா செயல்படாததால் கொள்ளையர்களின் உருவம் பதிவாகவில்லை.

    இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×