search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதிவு செய்ய கால நிர்ணயம் செய்யவில்லை: அமைச்சர் காமராஜ் விளக்கம்
    X

    ரே‌ஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதிவு செய்ய கால நிர்ணயம் செய்யவில்லை: அமைச்சர் காமராஜ் விளக்கம்

    ரே‌ஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதிவு செய்ய கால நிர்ணயம் செய்யவில்லை என்று அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இப்போது அச்சடிக்கப்பட்ட ரே‌ஷன் கார்டுகளை உபயோகப்படுத்தி வருகிறோம்.

    இதை ஸ்மார்ட் கார்டு வடிவில் மின்னணு ரே‌ஷன் கார்டுகளாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக ஆதார் அட்டைகளை ரே‌ஷன் கடைகளில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    ரே‌ஷன் கார்டில் பெயர் உள்ள அனைவரது ஆதார் அட்டைகளையும் கடை ஊழியர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

    ஆதார் அட்டையை பதிவு செய்யாத ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு இந்த மாதம் பொருட்கள் வழங்க முடியாது என்றும் ரே‌ஷன் கடை ஊழியர்கள் கூறு கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆதார் அட்டை எடுக்காத மக்கள் புதிதாக ஆதார் அட்டை எடுப்பதற்காக மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு சென்று கியூவில் நிற்கிறார்கள்.

    இதற்கிடையே ஆதார் அட்டையை 1-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கடை ஊழியர்கள் கூறி வருகின்றனர்.

    இது பற்றி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியதாவது:-

    ரே‌ஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதிவு செய்ய கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. எனவே பொதுமக்கள் எப்போதும் போல் ரே‌ஷனில் பொருட்களை வாங்கலாம்.

    ஆதார் அட்டையை கொண்டு வந்தால்தான் ரே‌ஷன் பொருட்களை தருவோம் என்று கடைக்காரர்கள் கூறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆதார் அட்டையை பதியாதவர்களுக்கும் ரே‌ஷன் பொருட்களை கொடுக்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.
    Next Story
    ×