search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாடியில் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி
    X

    பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாடியில் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு மாடியில் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது.
    பாப்பாரப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு மாடியில் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியை ஜோதிலட்சுமி தொடங்கி வைத்து காய்கறிகளின் முக்கியத்துவம், அவற்றின் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார்.

    இதில் பேராசிரியர்கள் இந்துமதி, சண்முகம், வெண்ணிலா மற்றும் பபிதா, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் மாடித்தோட்டத்திற்கு தேவையான பைகள், குழித்தட்டுகள், நாற்று உற்பத்தி, மண் புழு உரம், தென்னை நார்கழிவுகள், உயிர் உரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். மேலும் நோய் மேலாண்மை, பூச்சி மேலாண்மை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் தூய்மை பாரதம் குறித்து பொதுமக்கள் மற்றும் பேராசிரியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    Next Story
    ×