search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதி பெறாத பட்டாசு கடைகள் உடனடியாக அகற்றப்படும்: திருப்பூர் கலெக்டர் பேச்சு
    X

    அனுமதி பெறாத பட்டாசு கடைகள் உடனடியாக அகற்றப்படும்: திருப்பூர் கலெக்டர் பேச்சு

    திருப்பூரில் அனுமதி பெறாத பட்டாசு கடைகள் உடனடியாக அகற்றப்படும் என திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி பேசினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை பட்டாசு கடை விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்ககை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் மாத்தூர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி பேசும் போது கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள நிரந்தர பட்டாசு உரிமங்கள் மாநகர காவல் ஆணையர் மூலம் புதுப்பித்து வருகிறது. ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமங்கள் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாநகர பகுதியில் தற்காலிக பட்டாசு உரிமங்கள் மாநகர காவல் ஆணையரால் வழங்கப்படுகிறது.

    வருவாய் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்களை கொண்ட வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களை அமைத்து, அக்குழுக்கள் பட்டாசு கடைகளை தொடர்ந்து கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த குழுக்கள் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாத பட்டாசு கடைகள் அமைக்கபடுவதை கண்காணித்து அத்தகைய கடைகளை உடனடியாக அகற்றிடவும், சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    அனைத்து தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றுள்ள நபர்களும் உரிய முறையில் பட்டாசு கொள்முதல், விற்பனை, இருப்பு போன்ற கணக்கு விபரங்களை பராமரிக்க வேண்டும். அனைத்து தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றுள்ள நபர்களும் உள்ளூரில் நடப்பிலுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, மாநகர போலீஸ் துணை கமி ‌ஷனர் திஷா மிட்டல் , ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன், சாதனைக்குறள் தாசில்தார்கள்,தீயணைப்புத்துறையினர் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×