search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா 95 சதவீதம் குணம் அடைந்தார்: மத்திய மந்திரி தகவல்
    X

    ஜெயலலிதா 95 சதவீதம் குணம் அடைந்தார்: மத்திய மந்திரி தகவல்

    மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார்.
    சென்னை:

    மத்திய மந்திரி ஒய்.எஸ்.சவுத்திரி அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். துணை சபாநாயகர் தம்பித்துரை அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்கு குணம் அடைந்து வருகிறார் என்றும் 95 சதவீதம் தேறி விட்டார் என்றும் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×