search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை சங்கீத மஹாலில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
    X

    தஞ்சை சங்கீத மஹாலில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

    தஞ்சையில் அரண்மனை தேவஸ்தானம் சங்கீத மஹாலில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கைவினை பொருட்கள் கூட்டுறவு சங்கம் நடத்தும் கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடந்தது.

    இதில் தஞ்சாவூர், மதுரை, காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து கொலு பொம்மைகளை சங்க உறுப்பினர்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்டு தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சங்கீத மஹாலில் விற்பனை மற்றும் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

    மாயா பஜார் பொம்மைகள் செட், கும்பகர்ணன் செட், சுருட்ட பந்து சிவன் செட், மைசூர் தசரா செட், டோலி செட், சோட்டா பீம் செட், தசவதாரம் செட், அஷ்ட லெட்சுமி செட், ராமர் செட், சனிபிரதோசம் செட், உள்ளிட்ட ஏராளமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. மேலும் கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தள்ளுபடியாக 10 சதவீதம் வழங்கப்படுகிறது.

    இந்த கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இங்கு கொலு பொம்மைகள் ரூ.50 முதல் ரூ. 6 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×