search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி வழக்கில் வங்கி உதவி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை: சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
    X

    மோசடி வழக்கில் வங்கி உதவி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை: சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

    மோசடி வழக்கில் இந்தியன் வங்கி கிளையில் பணியாற்றிய உதவி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
    சென்னை:

    சென்னை துறைமுகம் இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றியவர் தில்கேஷ் சுவர்ணாக்கர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் முதல் 2009-ம் ஆண்டு ஜூன் வரை இப்பதவியில் இருக்கும்போது, தன் மனைவி அமித்வசோனி, வி.மங்களம், நிதின்பேக்மர், மோகனா ஆகியோரது வங்கி கணக்கிற்கு ரூ.35 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரத்து 508-ஐ செலுத்தி மோசடி செய்துள்ளார். இதனால், வங்கிக்கு பெரும் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியது. இந்த வழக்கு சென்னை 11-வது கூடுதல் சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டன. விசாரணையின்போது மோகனா இறந்துவிட்டார்.

    இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், உதவி மேலாளர் தில்கேஷ் சுவர்ணாக்கருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மற்றவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.

    Next Story
    ×