search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பா.ம.க - ம.தி.மு.கவினர் தி.மு.கவில் இணைந்தனர்
    X

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பா.ம.க - ம.தி.மு.கவினர் தி.மு.கவில் இணைந்தனர்

    இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பா.ம.க - ம.தி.மு.கவினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
    சென்னை:

    சென்னை மாவட்ட பா.ம.க செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பகுதி செயலாளர் மு.வெங்கடேசன், தாயுமானவன், சிவகுமார், தேவராசு, செந்தில், ரஜேஷ், ரமேஷ், சீனிவாசன், யோகாநந்தம், செண்பகவள்ளி, இரா, வெங்கடேசன், கார்த்திகேயன், சங்கர், ஆகியோர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதே போல், திருச்செங்கோடு ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் முத்துமணி தலைமையில் பரமத்தி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குப்புசாமி, செல்வமணி உள்ளிட்ட ஏராளமானோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.
    Next Story
    ×