search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்: புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவு
    X

    வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்: புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவு

    வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கூறியதாவது -

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற வுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 26.09.2016 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம், குன்றாண்டார்கோவில், விராலிமலை மற்றும் அன்ன வாசல் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வேட்பு மனு தாக்கல் பெறப்படும் இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலுப்பூர் ஆர்.சி தொடக்கப் பள்ளி மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்களும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு பெறப்பட்ட மனுக்கள் விபரம், தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் விற்பனை விபரம், போன்ற பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் தனித்தனியாக சென்று வரும் வகையில் தடுப்புக்கட்டைகள் அமைக்கவும், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களை சரிபார்த்து வாங்கவும், வாக்குப்பெட்டிகளை முழுப்பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்பஞ்சவர்ணம் (மாவட்ட வழங்கல் அலுவலர்), ஜெயபாரதி (உதவிஆணையர், கலால்), வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஷியம், விஜயநாதன், சுப்பிரமணியன், நாகராஜன், உதயக்குமாரி, பேரூராட்சி செயல் அலுவலர்சுலைமான் சேட், வட்டாட்சியர்கள் தமிழ்மணி,சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×