search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
    X

    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 21-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06001), மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

    * நெல்லையிலிருந்து அக்டோபர் 11-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் நெல்லை-சென்னை எழும்பூர் ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (82604) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

    * நெல்லையிலிருந்து அக்டோபர் 12-ந் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் நெல்லை-சென்னை எழும்பூர் ‘சுவிதா’ சிறப்பு ரெயில் (82602) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

    * நெல்லையிலிருந்து அக்டோபர் 23-ந் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06002) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

    * சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 12-ந் தேதி காலை 8.30 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளி சிறப்பு ரெயில் (06025), அதேநாள் மதியம் 2.15 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×