search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை

    காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

    இதில் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், பொது வழக்கறிஞர் முத்துகுமார சுவாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த சந்திப்பின்போது, இரு மாநில உயர் அதிகாரிகள் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறக் கூடும் என்று அதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இரு மாநில உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    முன்னதாக, தமிழகத்துக்கு காவிரியில் செப்டம்பர் 21-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கும் விசாரணைக்கு வந்தபோது, 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×