search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி தொடக்கம்
    X

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் ஸ்டெர்லைட் கோப்பைக்கான தென் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டி வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் ஸ்டெர்லைட் கோப்பைக்கான தென் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டி நேற்று (26-ந் தேதி) மாலை தொடங்கியது. இந்த போட்டி வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி, கிறிஸ்தவ கல்லூரி, சத்யபாமா பல்கலைக்கழகம், ஜேப்பியார் கல்லூரி, பெங்களுரு ஜெயின் கல்லூரி, சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழகம், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பங்கு பெறுகின்றன.

    பெண்கள் பிரிவில் சென்னை எம்.ஓ.பி.வி. கல்லூரி, சென்னை ஜேப்பியார் கல்லூரி, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், பெங்களுரு ஜெயின் கல்லூரி, மதுரை யாதவா கல்லூரி மற்றும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி பங்கு பெறுகின்றன.

    இப்போட்டியினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், ஸ்டெர்லைட் காப்பர் பொது மேலாளர் பிரதீப் நாயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தொடக்க விழாவில் பெங்களுரு கிரின் ஹோம் இயக்குனர் ஞானசேகர், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் பிரமாநந்தன், தமிழ்நாடு மாநில கூடைப்பந்து கழக துணைத்தலைவர் பாலன் மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல் போட்டி சென்னை எம்.ஓ.பி.வி. கல்லூரி மற்றும் மதுரை யாதவா கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் எம்.ஓ.பி.வி. கல்லூரி அணி 42-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×