search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருதய குறைபாடு குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    இருதய குறைபாடு குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை:

    பின்னர் அவர் பேசும் போது தெரிவித்ததாவது:-

    குறைபாடுகள் இல்லாத குழந்தைகள் பிறக்க வேண்டு மென்றால் நல்ல சத்தான உணவு கொடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் கொடுக்கப்படும் சத்தான சத்துமாவு கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்து வந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். ஆரோக்கியமான தலை முறைகள் உருவாக வேண்டுமென்றால் நல்ல உணவு பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடான சுகாதாரமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

    அம்மா ஆரோக்கிய திட்டத்தின் மூலமாக அனைத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ- மாணவியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றது. அவ்வாறு செய்யப்பட்ட பரிசோதனைகளில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவ மனைகளில் உயர் மருத்துவ சிகிச்சை இலவசமாக மேற் கொள்ளப்படுகிறது.

    சுகாதாரத்துறையின் சார்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாம்களில் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 58 மாணவ-மாணவியர்களுக்கு இருதய நோய் கண்டறியப்பட்டு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச்கை அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

    துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) யசோதாமணி, மாவட்ட குழந்தைகள் நல மருத்துவர் ரெஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×