search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா: 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    X

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா: 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 81-வது பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் 5 ஏழை ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடந்தது.
    சென்னை:

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 81-வது பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் 5 ஏழை ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடந்தது.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி, என்.ஆர்.டி. கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில் இந்த திருமணம் நடந்தது. திருமணத்தை அறக்கட்டளை தலைவர் என்.ஆர்.தனபாலன் நடத்தி வைத்தார்.

    மங்கலஇசை முழங்க இந்து முறைப்படி இந்த ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    திருமணம் நடத்தி வைக்கப்பட்ட 5 ஜோடிகள் பெயர் விவரம் வருமாறு:-

    * மாற்று திறனாளிகளான மதுரை ஒத்தக்கடை ராமமூர்த்தி- திருவண்ணாமலை வயலூர் த.ராஜேஸ்வரி,

    * விழுப்புரம் அசோகாபுரி ர.ஆனந்தன்- சென்னை அசோக்நகர் சுபாசினி.

    * நெல்லூர் எஸ்.சூர்யா-ராஜேஸ்வரி

    * நெல்லூர் பி.ராஜ்- போலம்மாள்

    * தடா ராமபுரம் ஆர்.சரவணன்- ஏ.ராஜேஸ்வரி.

    திருமண விழாவில் மணமக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் பட்டு வேட்டி, பட்டுசேலை, 2 கிராம் தங்க தாலி, கட்டில், தலையணை, மெத்தை, ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவற்றையும் என்.ஆர்.தனபாலன் வழங்கினார்.

    திருமணம் குறித்து என்.ஆர்.தனபாலன் கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை போற்றும் வகையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளோம்.

    மேலும் எங்களது அறக்கட்டளை சார்பில் இதுவரை ஆயிரத்துக்கும மேற்பட்ட இலவச திருமணங்களை நடத்தி உள்ளோம். திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் வாழ்த்துக்கள் ஐயாவின் புகழை மேலும் பரவ செய்யும் என்றார்.

    நிகழ்ச்சியில் எஸ்.வி.ஆர். விஜய்மாரீஸ், மாநில பொருளாளர் தர்மராஜ், மாணிக்கவாசகம், புரசை குமார், ராபர்ட், வி.பி.ஐயர், கப்பல்ராஜ், நாகராஜ், லட்சுமணன், ஜெயின் விக்டர், பி.குமார், டி.தேவராஜ், எம்.ஜெயபால், வைகுண்டராஜா, முத்து, சக்திவேல், ஆர்.எஸ்.பாண்டியன், பி.ராஜசுதாகர், டி.விஜயன், சாமுவேல் ரவி, எம்.ஆர்.சிவகுமார், சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×