search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டும் 5 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு
    X

    சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டும் 5 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

    மானாமதுரையில் இருந்த சென்னைக்கு செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் மீண்டும் 5 முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட்டன.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 2 முறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டன. தற்போது சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் 80 பேர் வரை பயணம் செய்யும் வகையிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 100 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ரெயிலின் வேகமும் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெயிலில் ரப்பர் புஷ் பிரேக்குக்கு பதிலாக டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும். ரெயில் பெட்டிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய என்ஜினுக்கு அடுத்த பெட்டி மற்றும் கடைசி பெட்டியில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பெட்டிகளை கழற்றி மாறுதால் செய்யும் போது நேரம் மிச்சமாகும். தடையின்றி பெட்டிகளில் மின்சாரம் கிடைக்கும்.  இவ்வாறு பல புதிய அமைப்புகள் இந்த ரெயிலில் கொண்டு வரப்பட்டன.

    ஆனால் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைத்த பின்பு முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை 5–ல் இருந்து 2–ஆக குறைக்கப்பட்டன. இது பயணிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இதுகுறித்து மானாமதுரை பகுதி ரெயில் பயணிகள் மீண்டும் 5 முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருந்தது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களிடையே திடீரென இடம்பிடிப்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.

    இந்த நிலையில் ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரெயில்வே துறையினர் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டும் 5 முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்தனர். இது ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    Next Story
    ×