தலைவாசல் >> கலைமலர்
Recommendations
Recent Activity
கவிதை
இயேசு பாடல்கள்
இயேசு பாடல்கள்
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி
சிறுகதை
அட! இப்படி ஒரு திருமண அழைப்பா?
அட! இப்படி ஒரு திருமண அழைப்பா?
மஞ்சள் பையில் மங்களகரமாக திருமண அழைப்பிதழ்களை எடுத்துவைத்துக்கொண்டு,நகரத்து மனிதரான அவர் உறவினர்கள்
வந்தே மாதரம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன் வாயுற வாழ்த்தேனோ? - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து,அருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் போந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் தழுவிய திந்நாடே - மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?
என்ன பிறப்பு இது?
இரை தேடச்சென்ற இடத்தில் தற்செயலாக இரு ஓணான்கள் சந்தித்துக் கொண்டன.இரண்டும் உலக விஷயங்கள் குறித்தும், தங்களுடைய வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தன. "என்ன பிறப்பு இது? ஏதோ சாப்பிடுகிறோம்,சுற்றுகிறோம், தூங்குகிறோம். இதெல்லாம் ஒரு வாழ்வா? நமக்கென்று ஒரு பெயர் உண்டா? மரியாதை உண்டா? இல்லை நம்மைப்பற்றி யாராவது பெருமையாகப் பேசுகிறார்களா? ஒன்றுமே கிடையாது. புள்ளிமானாகப் பிறந்திருந்தாலாவது ராஜாவின் தோட்டத்தில் சுற்றித் திரியலாம். நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள். வேளாவேளைக்கு உணவு கிடைக்கும். இப்படி காடு முழுக்க சுற்றித்திரிய வேண்டிய அவசியமில்லை'' என அலுத்துக் கொண்டது ஒரு ஓணான். இப்படி அது பேசிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு வேட்டை நாய்கள் ஒரு புள்ளிமானை துரத்திக் கொண்டு வந்தன. உயிர் பிழைக்கும் ஆசையில் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது புள்ளிமான். இருந்தாலும் வேட்டை நாய்கள் அதைப் பிடித்து விட்டன. தங்கள் கண் முன்னாலேயே புள்ளிமான் வேட்டையாடப்படுவதை இரண்டு ஓணான்களும் பார்த்தபடி இருந்தன. வேட்டை நாய்கள் சென்றபிறகு, அதுவரை பொறுமையாக இருந்த மற்றொரு ஓணான் பேசத் தொடங்கியது. "இங்கு நடந்ததைப் பார்த்தாயா? எல்லா உயிர்களுக்குமே ஆபத்து இருக்கிறது. நாம்தான் அதிலிருந்து கவனமாக நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புள்ளிமானின் நிலையைப் பார்த்தாவது நீ திருந்துவாய் என நினைக்கிறேன்'' என்றது. ஓணானும் அதைப் புரிந்து கொண்டது போல தலையை ஆட்டியது. கதையின் நீதி: எப்போதுமே இருப்பதைக் கொண்டு திருப்தியடையக் கற்றுக் கொள்ள வேண்டும். -திருப்தி ***
நாடக மேடை
டீச்சர்: உலகம் ஒரு நாடக மேடை.அதில் நாம் அனைவரும் நடிகர்கள். மாணவி: சார் சார்,அப்போ எனக்கு விஷால ஜோடியா போடுங்க சார்!
கல்யாணம்
எல்லா ஆண்களும் சமமானவர்களாகவும் சுதந்திரமாகவும் பிறக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சிலருக்குக் கல்யாணமாகி விடுகிறது!