search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலியல் பாதுகாப்பு கருவியுடன் சீனு குமாரி
    X
    பாலியல் பாதுகாப்பு கருவியுடன் சீனு குமாரி

    பெண்களுக்கு எதிரான பாலியல் பாதுகாப்பு

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை காக்கும் ஆடை ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.
    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வெளியிடங்களுக்கு செல்லும்போது தங்களை தற்காத்து கொள்வதற்கு பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. நிறையபேர் ‘பெப்பர் ஸ்பிரே’ உள்ளிட்ட தற்காப்பு சாதனங்களை கையாளுகிறார்கள். இந்தநிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை காக்கும் ஆடை ஒன்றை வடிவமைத்திருக்கிறார். அவரது பெயர் சீனு குமாரி.

    ஆடையினுள் பெல்ட் போன்று சிறிய அளவிலான கருவியை இணைத்து அதில் கேமிரா, இருப்பிடத்தை அறிய உதவும் ஜி.பி.எஸ்.கருவி உள்ளிட்டவற்றை பொருத்தியிருக்கிறார். அசம்பாவித சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் ஆடையுடன் இணைக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தினால் போதும். அதிலிருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோருக்கு எச்சரிக்கை அழைப்பு சென்றுவிடும். 

    மேலும் ஜி.பி.எஸ். கருவி அந்த பெண் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை தெரியப்படுத்திவிடும். அந்த சாதனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிரா பாலியல் தொந்தரவு செய்பவர்களை படம் பிடித்துவிடும். இதன் மூலம் போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார், சீனு குமாரி.

    ‘‘ஆடையினுள் இருக்கும் கருவியை பாதுகாப்பாக வடிவமைத்திருக்கிறேன். ஆடையை அணிந்திருப்பவர் பாஸ்வேர்டை பதிவு செய்தால் மட்டுமே அது செயல்படும். ஜி.பி.எஸ். கருவியும், எச்சரிக்கை அழைப்பும் செல்லும் வகையில் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பாக அமையும். இதனை வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது அணிந்து கொள்ளலாம்’’ என்கிறார்.
    Next Story
    ×