search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    திருமணம் குறித்து சில யோசனைகள்
    X

    திருமணம் குறித்து சில யோசனைகள்

    வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
    திருமண உறவைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக பயன்கள் இருக்கிறது. 

    எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது.  திருமணமான பெண்களை விட மணம் செய்து கொள்ளாமல் தனியே வாழும் பெண்கள்தான் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள் எனவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

    மனைவி முதலில் இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் தனிமையை எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் முழுக்க மனைவி செய்யும் பணிவிடைகளை சார்ந்து வாழ்கிறார்கள்.

    திருமண உறவானது 100 சதவிகிதம் வெற்றிபெறும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. அதன் வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

    உங்களை பிடிக்காத நபரை எந்த கட்டாயம் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பிரச்சனையில் தான் போய் முடியும்.



    திருமணமானால் எல்லாம் சரியாகி விடும் என பிடிக்காதவரை மணம் செய்தால் எல்லா பிரச்சனைகளும் அதிகமாகுமே தவிர குறையாது.

    திருமணம் முடிவு செய்யும் போதே, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி புரிதல் அடைவது அவசியம். திருமணமான பிறகும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.

    நம்பிக்கைதான் திருமணத்திற்கான அஸ்திவாரம். திருமணமான பின் அடுத்த பெண்ணை தேடிப் போகாமல் இருந்தாலே தாம்பத்திய உறவில் பல பிரச்சனைகள் ஏற்படாது.

    திருமணத்திற்கு பிறகு தம்பதிகளில் ஒருவரை மற்றொருவர் மனம் நோகும் படி செய்வதோ, அடுத்தவரை அழச் செய்வதோ கூடாது. அவர்கள் அன்புக்கு தகுதி இல்லாதவர்கள்.

    திருமண உறவிற்கு யாரும் கியாரன்டி அட்டை தர முடியாது. அது இரு மனம் சம்பந்தமான சூதாட்டமே. அப்புறம் ஏன் திருமணம் செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு பதில்… இந்த சிறப்பான உறவுக்கான மாற்று உறவு இதுவரை கண்டறியப்படவில்லை.
    Next Story
    ×