search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை
    X

    பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை

    பெண்கள் வெளியில் செல்லும் போது எடுத்து செல்லும் கைப்பையில் என்ன பொருட்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    இன்றைய காலகட்டத்தில் வெளியில் செல்லும் பெண்கள் தங்கள் கைபைகளை எடுத்துச் செல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிற ஒரு நடவடிக்கையாகவே உள்ளது. ஆனால் அதில் எதை கொண்டு செல்வது என்பது பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    செலவுக்கு தேவையான பணம் வைத்திருப்பதுடன், அவற்றை உள்பாக்கெட்டில் வைத்திருப்பது நல்லது. இதனால் பணம் தொலைந்து போகாமல் தடுக்கப்படுவதோடு, தேவையற்ற செலவுகளும் தடுக்கப்படும்.

    தொலைபேசியில் பேட்டரி தீர்ந்து போனாலோ, தொலைபேசி தொலைந்து போனாலோ, யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். அதனை தவிர்ப்பதற்காக மிக முக்கியமான இலக்கங்களை மட்டும் குறித்து ஒரு சிறிய பாகெட் சைஸ் டைரியை வைத்துக் கொள்ளலாம்.

    பஸ் அல்லது ரயிலில் பயணிப்பவர்களாக இருந்தால் பயண அடையாள அட்டையையும், வாகனம் ஓட்டுபவராக இருப்பின் லைசென்சையும், கைப்பையில் ஒரு நிரந்தர அறையில் வைக்கவும். கைப்பை தொலைந்து போனால் கிடைக்கக்கூடும் என்பதால் அடையாள அட்டை நகலை எடுத்துச் செல்லலாம்.

    எப்போதும் ஒரு பேனா மற்றும் சில்லறைகளையும் வைத்திருப்பது நல்லது.

    எப்போதும் கைப்பையில் கவர் செய்யப்பட்ட கத்தி, பாதுகாப்பிற்கென பெப்பர் ஸ்ப்ரே வைத்திருப்பது நல்லது.

    கைப்பையின் ஒரு தனியறையில் நாப்கின் வைத்திருக்கவும். 



    சேப்டி பின், ஹேர்பின்கள், மற்றும் தலைவலி மாத்திரை, தைலம் என்பனவும் தேவைக்கு ஏற்றவாறு வைத்திருக்கலாம்.

    தேவைக்கேற்ப அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சார்ஜர், பவர்பேங்கையும் எடுத்துச் செல்லலாம். 

    இருக்கக்கூடாதவை :

    அதிக சில்லறை இருப்பதனால் கைபையின் எடை அதிகரிக்கலாம் அதனால் அளவான சில்லறை போதுமானது.

    கத்தியை சரியாக கவர் செய்யாமல் இருந்தால் கைப்பையுடன் சேர்த்து கைகளையும் பதம் பார்க்கலாம்.

    பேனாவை மூடி இல்லாமல் வைக்க வேண்டாம். இல்லாவிடில் பேனா மை பையில் கொட்டிவிட வாய்ப்புள்ளது.

    அதிக மேக்கப் சாமான்களையும் வைப்பதையும் தவிருங்கள் இல்லையெனில், அவை மூடி திறந்து கொட்டிவிடும் வாய்ப்புள்ளது. 

    இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு கைப்பைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
    Next Story
    ×