search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் மனஅழுத்தச் சிறையில் இருந்து தப்பிக்கும் வழிகள்
    X

    பெண்கள் மனஅழுத்தச் சிறையில் இருந்து தப்பிக்கும் வழிகள்

    இன்று பலரும், குறிப்பாக பெண்கள், இளைய தலைமுறையினர் மனஅழுத்தச் சிறையில் அதிகம் சிக்கித் தவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    இன்று பலரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் மனஅழுத்தச் சிறையில் அதிகம் சிக்கித் தவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    அதற்கு, இன்று அதிகரித்துவரும் நகரமயச் சூழல் ஒரு முக்கியக் காரணம். இன்று நம் மீது அதிகம் சூரிய ஒளி படுவதில்லை, சுத்தமான காற்றை அதிகம் சுவாசிப்பதில்லை, கண்கள் குளிர பசுமைச் சூழலை பார்ப்பதில்லை.

    இவையெல்லாம் நம் மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எழில் கொஞ்சும் இயற்கை, மூளைக்கு இதம் அளிக்கிறது என்றால், கசகசப்பும் பரபரப்பும் நிறைந்த நகரச் சூழல், மூளைக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    இன்று இந்தியாவில் 40 சதவீதம் பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம்தான், அதிகரித்துவரும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், படபடப்பு, தற்கொலை உணர்வு போன்ற பல்வேறு தீமைகளுக்கு மூலவேர் என்பதை நாம் உணர வேண்டும்.

    சரி, மனஅழுத்தத்தில் இருந்து எப்படித் தப்பிக்கலாம்? நிபுணர்கள் கூறும் சில ஆலோசனைகள் இதோ...

    * ஆரோக்கியமான, சரியான அளவு உணவு, மூளைச் செயல்பாட்டை ஊக்குவித்து, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்திய உணவு போன்றவற்றைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இறைச்சி புரதத்தைக் குறைக்க வேண்டும். புளிக்கவைத்த தயிர் போன்ற உணவுகள் செரிமானத்துக்கும், மூளைக்கும் நல்லது.

    * தினந்தோறும் இரவு 7 முதல் 9 மணி நேரம் உறங்குவது மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது, மனநிலையை மேம்படுத்துகிறது.

    * தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் ஏதாவது உடல் உழைப்பு சார்ந்த விஷயத்தில் ஈடுபடுவது, மனஅழுத்தத்தைத் துரத்துகிறது, உடலெங்கும் உற்சாகத்தைப் பரப்புகிறது. யோகாசனம், பிராணாயாமம் போன்றவையும் நன்கு பலன் தரும்.

    * மனஅழுத்தம், மனநெருக்கடியைக் குறைப்பதில் தியானத்தின் பங்கை பல ஆய்வுகள் தற்போது நிரூபித்திருக்கின்றன. 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்தாலே, மனஅழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுகிறது, ரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் மிதமாகிறது, மூளையின் நலத்துக்கு உதவுகிறது.
    Next Story
    ×