search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே மிக்ஸி வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை
    X

    பெண்களே மிக்ஸி வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை

    இன்றைய பெண்களின் வேலையை சுலபமாக்குவது மிக்ஸி. பெண்களே புதிய மிக்ஸி வாங்கும்போது கீழ் வருவனவற்றை அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்.
    இந்திய சமையல் என்றாலே மசாலா அரைக்காமல் எந்த சமையலும் இல்லை எனலாம். அந்த அளவிற்கு தேங்காய், மசாலாப் பொருட்கள், வெங்காயம், தக்காளி என்று தினசரி சமையலுக்கே மிக்ஸி இல்லாமல் முடியாது. எனவே ஒவ்வொரு சமையலறையில் அவசியம் இருக்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டரை அவ்வப்போது மாறவும் வேண்டியிருக்கும். எனவே அடுத்தமுறை புதிய மிக்ஸி வாங்கும்போது கீழ் வருவனவற்றை அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்.

    லாக்கிங் சிஸ்டம்

    மிக்ஸியின் அடிப்புறத்தில் (பேஸ் யூனிட்) தரையோடு சேர்த்து பிடித்துக் கொள்ளக்கூடிய வாக்யூம் கப் உள்ளதா என்று கவனியுங்கள். இல்லையென்றால் மிக்ஸி ஓடும்போது அதிர்வினால் மிக்ஸி நழுவி கீழே விழுந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதேபோல் மூடியிலும் லாக்கிங் சிஸ்டம் இருக்க வேண்டும். அதாவது மூடி சரியாக மூடவில்லையென்றால் மிக்ஸி சுத்தாது. இந்த முறையினால் மிக்ஸி ஓடும்போது மூடி திறந்து பொருட்கள் வெளியே சிதறிவிடும் அபாயம் இருக்காது.

    வர் லோட் பாதுகாப்பு

    மிக்ஸியில் அதிக அளவு போட்டு அதிக விரைவில் அரைத்தால் மோட்டார் திணறும். கஷ்டப்பட்டு வேலை செய்யும் மோட்டார் வெடித்துவிடும் அபாயமும் கூட ஏற்படலாம். எனவே அதிக கடினம் ஏற்படும்போது மிக்ஸியின் மின்சார ஓட்டம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு மிக்ஸி நின்றுவிடும். மிக்ஸியின் சூடு குறைந்தவுடன் மீண்டும் ஆன் செய்தால் ஓட ஆரம்பிக்கும். இந்த வசதி மிக்ஸியில் அவசியம் இருக்க வேண்டும்.



    மின்சார வசதி

    பொதுவாக நாம் அரைக்கும் சட்னி, பொடி வகைகள் போன்றவைகளுக்கு 400 வாட்ஸ் சக்தி கொண்ட மோட்டார் போதுமானது. ஒருவேளை வெட் கிரைண்டர் செய்யும் வேலையான இட்லி, தோசை மாவு அரைக்க வேண்டும் என்றால் 750 வாட்ஸ் மோட்டார் இருப்பது அவசியமாகும்.

    மோட்டாரின் வேகம்

    ஒரு நிமிடத்திற்கு மிக்ஸியின் ப்ளேட் எத்தனை சுழற்சி செய்கிறது என்பதை ஆர்.பி.எம். என்கிறார்கள். அந்த ஆர்.பி.எம். 18000 முதல் 22000 என்ற அளவில் பெரும்பாலான மிக்ஸிகள் இருக்கும். இவற்றை இயக்கும்போது மீடியம் ஆர்.பி.எம். இயக்குவது நல்லது. அந்த வேகத்தில் தான் அரைக்கும் பொருள் எல்லா பகுதிகளிலும் நன்கு சுழன்று சரியாக அரைபடும்.

    ஜூசர் வசதி மிக்ஸியில் இருப்பது நல்லது

    மிக்ஸியிலேயே ஜூஸ் பிழியும் வசதி இருப்பது நல்லது. இதற்கு தனியாக ஜூசர் வாங்குவது வீண் செலவு. மிக்ஸி ஜாரில் ஒன்று ஜூசராகவும், ஒன்று குறைவான மசாலா பொருள் அரைக்கவும், மற்றொன்று தேங்காய் சட்னி போன்றவை அரைக்கவும் என்று இருப்பதே போதுமானது.

    விற்பனைக்குப் பின் சேவை மற்றும் உத்திரவாதம்


    மின்னணு சாதனங்கள் கொஞ்ச நாள் பயன்பாட்டில் பழுதாகலாம். சின்ன பழுதுகளை சரி செய்யவும். சிறு பாகங்களை மாற்றவும் சரியான சேவை மையம் கொண்ட பிராண்டை தேர்ந்தெடுப்பது நல்லது. அதேபோல் சரியான உத்திரவாதம் அளிக்கும் நிறுவனமாக பார்த்து தேர்ந்தெடுப்பதும் மிகவும் அவசியம். மிக்ஸி அடிக்கடி மாற்றும் பொருள் இல்லை என்பதால் உத்திரவாதத்தில் சமரசம் செய்வது கூடாது.
    Next Story
    ×