search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயதான பெற்றோருக்கு கொடுக்கக்கூடிய உபயோகமான பரிசுகள்
    X

    வயதான பெற்றோருக்கு கொடுக்கக்கூடிய உபயோகமான பரிசுகள்

    பண்டிகை நாட்களில் வயதான பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை சென்று பார்த்து வருவது எல்லோருக்குமே சந்தோஷமான ஒரு தருணம்.
    பண்டிகை நாட்களில் வயதான பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை சென்று பார்த்து வருவது எல்லோருக்குமே சந்தோஷமான ஒரு தருணம். அந்த சந்தோஷசத்தை நிறைவாக மாற்றக்கூடியது அவர்களுக்கு நாம் அளிக்கும் பரிசுகள். எல்லா வசதிகளுடன் தனியாக வசதித்து வரும் இப்பெரியவர்களுக்கு கொடுத்து அசத்த பல பரிசுப் பொருட்கள் அழகழகாய், புதுமையாய் இருக்கின்றன. அவைகளைப் பற்றி சற்றே விரிவாய் பார்க்கலாமா...

    நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஆல்பம் :

    அழகான வடிவத்தில், சிறந்த வண்ணங்களில் உள்ள இந்த ஆல்பங்கள் பெரியவர்களின் நினைவில் உள்ள கடந்த காலத்தை பற்றி தங்கள் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் எழுதிவிட்டு செல்ல வழிவகுக்கிறது. இந்த ஆல்பங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளும், ஊக்குவிக்கும் வார்த்தைகளும் அவர்களின் கடந்த கால நினைவுகளை தட்டி எழுப்பவும் சுலபமாய் பகிரவும் உதவுகிறது. அவர்களுடைய குழந்தை பருவம் முதல், கல்வி, காதல், திருமணம், வேலை, நண்பர்கள், முக்கிய நிகழ்வுகள், குடும்ப வாழ்க்கை, பெற்றோராய் இருந்தது, தாத்தா பாட்டியாய் இருப்பது வரையில் அனைத்தையும் இதில் பகிர்ந்துக் கொள்ளலாம்.

    காபி மேக்கர் :

    காலை எழுந்தவுடன் காபி குடிப்பது பெரியவர்களுக்கு அவசியமான ஒன்றாகவே இன்றளவும் கருதப்படுகிறது. காலையில் எழுந்ததும் காபி பொடி முதல் ஒவ்வொன்றையும் தேடி எடுத்து காபி போடுவது சற்றே கஷ்டமாக இருக்கலாம். அதேபோல் திடீரென்று யாராவது வீட்டிற்கு வந்தால் உடனடியாக சென்று அவர்களுக்கு காபி போடுவதும் சிரமமாக இருக்கலாம். இம்மாதிரி சமயத்தில் கை கொடுப்பது தான் இந்த காபி மேக்கர். ஒரு முறை நிரப்பி விட்டால் எட்டிற்கு மேற்பட்ட கப் காபி இதில் கிடைத்துவிடும். இந்த ஃபில்டர் காபி அவர்களுக்கு தேவைப்படும் அடர்த்தியில் செட் செய்து கொள்ளலாம்.



    மசாஜ் தலையணை :

    கழுத்து வலி, கை வலி, கால் வலி என்பது பெரியவர்களுக்கு மிகவும் சகஜமானது தானே. இதற்கு இந்த மசாஜ் தலையணை மிதமான சூட்டோடு லேசாக தசைகளை பிடித்தும் விடும். கைகளால் பிசைவது போன்ற அமைப்பு இதில் உள்ளதால் கழுத்து, இடுப்பு, கால்கள் என்று எங்கு வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம்.

    கீ பைண்டர் :

    சாவிகளை அங்கங்கு வைத்து விட்டு தேடுவதும் பெரியவர்களிடம் சகஜமாக காணப்படும் ஒரு பழக்கம். அங்கும் இங்கும் அலைந்து தேடுவதை இந்த பரிசுப் பொருள் தவிர்க்க உதவும். 300 அடி வரை இருக்கும் சாவியை இது கண்டுபிடித்து கொடுத்து விடும். இரண்டு கீ ஹோல்டருடன் வரும் இந்த கீ ஃபைண்டர் இரண்டு சாவி கொத்துக்களிலும் இணைத்துக் கொள்ளலாம். அப்புறம் சாவி தேடும் போதெல்லாம் உங்களை வாழ்த்துவார்கள் உங்கள் வீட்டு பெரியவர்கள்.
    Next Story
    ×