search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே வீடு துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்க பின்பற்ற வேண்டியவை
    X

    பெண்களே வீடு துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்க பின்பற்ற வேண்டியவை

    பெண்களே தங்களின் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒருசில விதிமுறைகளைப் பின்பற்றினால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
    பெண்களே வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தங்களின் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒருசில விதிமுறைகளைப் பின்பற்றினால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

    வீடு என்பது ஒவ்வொருவரின் மன அமைதியையும் மேம்படுத்தும் ஓர் இடம். அத்தகைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தற்போது ஒரு வீட்டில் கணவன், மனைவி என இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டை சுத்தப்படுத்துவதற்கு என்று நேரம் கிடைப்பதில்லை. அப்படி வேலைக்கு செல்வோர் தங்களின் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒருசில விதிமுறைகளைப் பின்பற்றினால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

    அது என்னவெனில், தினமும் இரவில் படுக்கும் முன் ஒருசில வேலைகளை கணவன், மனைவி என இருவரும் சேர்ந்து செய்து வந்தால், உங்கள் வீடு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரி, இப்போது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாட இரவில் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போமா!!!

    இரவில் படுக்கும் முன், உணவு சமைத்த பாத்திரங்கள் மற்றும் உணவு உண்ட தட்டுகள் என அனைத்தையும் கழுவி, பாத்திரம் கழுவும் இடத்தில் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்துவிட வேண்டும். இதனால் பாத்திரம் கழுவும் இடத்தில் துர்நாற்றம் வீசுவதையும், பூச்சிகள் வருவதையும் தடுக்கலாம்.



    தினமும் இரவில் படுக்கும் முன், அடுப்பில் தண்ணீர் தெளித்து, வினிகர் மற்றும் உப்பு கலந்த கலவையை தெளித்து, சோப்பு பயன்படுத்தி தேய்த்து, பின் ஈரத்துணியால் சுத்தம் செய்தால், அடுப்பில் எண்ணெய் பசை இருப்பதைத் தடுப்பதோடு, அடுப்பும் புதிது போல் மின்னும்.

    ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தரை விரிப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதனால் வீட்டினுள் தூசிகள் தங்கி, அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    வீட்டு வேலையெல்லாம் முடிந்துவிட்டது என்று, அப்படியே போய் மெத்தையில் படுக்காமல், நன்கு தட்டிவிட்டு, பின் தூங்க செல்லுங்கள். இதனால் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

    காலணிகளை அதற்குரிய இடத்தில் வைப்பதோடு, அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டு பின் வையுங்கள்.

    தூங்க செல்லும் முன், கழிவறையில் ஒரு வாளி தண்ணீரை விட்டு, கழிவறையின் ஜன்னல் அறையைத் திறந்து வையுங்கள். இதனால் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.
    Next Story
    ×