search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஃப்ரிட்ஜ் பராமரிப்பில் பெண்களுக்கு சில வழிமுறைகள்
    X

    ஃப்ரிட்ஜ் பராமரிப்பில் பெண்களுக்கு சில வழிமுறைகள்

    வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. பெண்களே முறையாக ஃபிரிட்ஜை சுத்தம் செய்தால் அதன் ஆயுட்காலம் நீடிப்பதுடன் மின்சார சிக்கனமும் கிடைக்கும்.
    வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. இவ்வளவு நாள் அதிகமாய் உழைத்த ஃபிரிட்ஜிற்கு சிறிது ஓய்வும் பராமரிப்பும் கொடுப்பது அவசியமல்லவா. அதற்கான சில குறிப்புகளை பார்ப்போம்.

    ஃபிரிட்ஜ் கதவை சுற்றியுள்ள சீல் தளர்ந்து விட்டிருந்தால் அதன் வழியாக குளிர்ச்சி வெளியேறி மின்சார பயன்பாட்டை அதிகமாக்குவதுடன் கம்ப்ரெஸ்ஸரின் ஆயுட்காலத்தையும் குறைத்து விடும். எனவே 6 மாதங்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜின் சீல்களை வாஷிங் சோடா மற்றும் தண்ணீர் கரைசலை டூத் ப்ரஷ் கொண்டு தடவி சுத்தம் செய்ய வேண்டும். சீல் சரியாக இருப்பதை உறுதி செய்ய ஒரு பத்து ரூபாய் தாளை கதவிடுக்கில் வைத்து மூட வேண்டும். மூடிய பின் ரூபாய் தாளை வெளியே எடுக்க முடிந்தால் சீல் தளர்ந்து விட்டது என்று அர்த்தம். உடனடியாக அதை பழுது பார்ப்பது நல்லது.

    கன்டென்சர் காயில்கள் வெளியே தெரியும் ஃப்ரிட்ஜாக இருந்தால் அதன் மேல் உள்ள தூசிகளை ப்ரஷ் அல்லது வாக்யூம் கிளனர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    ஃப்ரிட்ஜில் முடிந்தவரை எல்லா இடங்களிலும் நிறைவாக பொருட்களை வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜ் காலியாக இருந்தால் ஒவ்வொரு முறை திறக்கும்போதும் அதிக வெப்பக்காற்றை உள்ளிருக்கும் பொருட்கள் ஈர்த்துக் கொள்ளும்.



    ஃப்ரீஜரில் ஒன்றரை அங்குலத்திற்கு மேல் ஐஸ் கட்டி சேர்ந்து விட்டால், உள்ளே இருக்கும் பொருட்களையெல்லாம் எடுத்து விட்டு மின்சாரத்தை துண்டித்து, ஐஸ் முழுவதும் உருகிய பின் ஃப்ரிட்ஜை ஆன் செய்து பின் பொருட்களை அடுக்க வேண்டும். செல்ஃப் டிஃராஸ்ட் உள்ள பிரிட்ஜ்களுக்கு இதை செய்ய வேண்டிய தேவையில்லை.

    ஃபிரிட்ஜ்களுக்கே உரித்தான பிரத்யேக வாசனையளிக்கும் டியோடரைசரை வைப்பது நல்லது. பேக்கிங் சோடாவை விட இந்த டியோடரைசர்கள் 50 மடங்கு சக்தி வாய்ந்தவை என்பதுடன் 6 மாதங்கள் வரையில் நீடிக்கக் கூடியவையுமாகும்.

    வாரம் ஒரு முறையேனும் வெதுவெதுப்பான நீரில் துணியை தொட்டு கீழே மற்றும் சுவர் பகுதிகளில் சிதறி இருக்கும் உணவு துணுக்குகளை அகற்றுவது நல்லது. எண்ணெய் பிசுக்கு மற்றும் கறை இருந்தால் அவற்றை நீக்குவதை சுலபமாக்கும் க்ளனர் கொண்டு சுத்தம் செய்யலாம்.

    ஃப்ரிட்ஜில் உணவுப் பொருட்களை வைக்கும்போது அவற்றை காற்று புகாத கசிவு இல்லாத பாத்திரங்களில் போட்டு வைப்பது நல்லது. இல்லையென்றால் உணவுப் பொருளின் வாசனை மற்ற பொருட்களில் கலந்து விடும்.

    முறையாக ஃபிரிட்ஜை சுத்தம் செய்தால் அதன் ஆயுட்காலம் நீடிப்பதுடன் மின்சார சிக்கனமும் கிடைக்கும்.
    Next Story
    ×