search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டில் இருப்பவர்களை சாமர்த்தியமாய் அழைக்கும் - வீடியோ டோர் பெல்
    X

    வீட்டில் இருப்பவர்களை சாமர்த்தியமாய் அழைக்கும் - வீடியோ டோர் பெல்

    வீட்டில் யாரும் இல்லையென்றதை உறுதி செய்து கொண்டு பூட்டை உடைத்து உள்ளே வர முயலும் திருடர்களையும் இந்த டோர் பெல்கள் காட்டிக் கொடுத்துவிடும்.
    வீட்டிற்குள் தனியே இருக்கும் போது டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, குளித்துக்கொண்டிருந்தாலோ, மூடிய அறைக்குள் முக்கியமான வேலையில் இருந்தாலோ காலிங் பெல் அழைக்கும் சத்தம் நமக்கு கேட்பதில்லை. திடீரென்று கேட்கும் போது பதறி அடித்து ஓடி வர வேண்டியிருக்கும். இம்மாதிரியான அசவுகரியங்களை தவிர்க்க உதவுவதே வயர்லெஸ் வீடியோ டோர் பெல்.

    மிகவும் சாமர்த்தியமாக இயங்கும் வகையில் இந்த பெல்கள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டில் யாரும் இல்லையென்றதை உறுதி செய்து கொண்டு பூட்டை உடைத்து உள்ளே வர முயலும் திருடர்களையும் இந்த டோர் பெல்கள் காட்டிக் கொடுத்துவிடும்.

    இந்த வயர்லெஸ் வீடியோ டோர் பெல் யாராவது வீட்டின் காலிங் பெல்லை அழுத்திய உடனே அதைப்பற்றிய தகவலை உடனடியாக நம் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும். வீட்டின் வைஃபை சிஸ்டம் இதற்கு எப்போதும் ஆன் செய்தே இருக்க வேண்டியதும் அவசியம். அப்படி யாராவது வந்து டோர் பெல்லை அடிக்கும் சமயம் நாம் வீட்டில் இல்லாமல் வெளியில் இருந்தாலும் நம் ஸ்மார்ட் போனிற்கு ரிங் வருவதால் நாம் போன் மூலம் வந்துள்ள நபருடன் பேசலாம்.



    பொருட்கள் விற்க வரும் நபரானாலும், உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் வந்திருந்தாலும் நாம் அவர்களுடன் பேசி தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். குழந்தைகளை வீட்டில் தனியே விட்டு விட்டு அலுவலகம் அல்லது கடைக்கு சென்றிருந்தாலும் கூட, யாரும் பெல் அடித்து குழந்தைகளை தொந்தரவு செய்யவோ, ஆபத்தை விளைவிக்கவோ முடியாத வகையில் இந்த டோர் பெல் பாதுகாப்பை வழங்குகிறது. நம் போன் மூலம் நாம் பேசினாலும் வீட்டின் உள்ளேயிருந்து பேசுவது போலும், வெளி ஆட்களுடன் பேசி ஆபத்துக்களை சமாளிக்கலாம்.

    இந்த வைஃபை வீடியோ டோர் பெல்லை வீட்டில் பொருத்துவதும் சுலபமானதே. கையடக்கமாக உள்ள இந்த கருவியை வீட்டின் முகப்பு கதவிற்கு மேலே பொருத்திவிட்டு அதை வீட்டின் வைஃபை நெட்வொர்க்குடன் வயர் மூலமோ, வயர்லெஸ்ஸாகவோ இணைத்து விட வேண்டும். பின்னர் இந்த கருவியின் ஆப்பை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து நம் ஸ்மார்ட் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும்.

    அவ்வளவுதான். இப்போதும் நம் வீட்டின் முன்பு யார் நின்றாலும் அவர்களை முழுவதுமாக நம்மால் நம் போனில் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் முடியும். நாம் பேசுவதை அவர்கள் கேட்டு பதில் சொல்லவும் முடியும். இதில் ப்ராண்ட் டோர் பெல்களில் ‘நைட் விஷன்’ வசதி இருப்பதால் இரவில் இருட்டில் யாரேனும் வந்தாலும் அவர்களின் முகத்தை தெளிவாக பார்க்க முடியும். இவற்றுள் எல்லா தகவல்களும் பதிவாவதால் யார் வந்து போனார்கள் என்பதையும் தேவைப்படும்போது எடுத்து பார்த்துக் கொள்ளலாம்.
    Next Story
    ×