search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்திசாலி பெண்ணை ஆண்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம்
    X

    புத்திசாலி பெண்ணை ஆண்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம்

    "ஆண்கள் தங்களை விடப் புத்திசாலித்தனமான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயங்குவார்கள்" என்கின்றனர் சில உளவியலார்கள்.
    ரொம்ப அறிவான பொண்ணுன்னா உலக விஷயங்களையெல்லாம் பேசுவாங்க. நம்ம ஹீரோவுக்கு அந்த ஏரியா வீக்குன்னா "இந்த புத்தி சாலிப் பொண்ணுகளே இப்படித் தான்" என்று புலம்ப வாய்ப்பு உண்டு.

    இன்னும் சிலருக்கு பொண்ணுன்னா நாம வரைஞ்ச கோட்டைத் தாண்டக் கூடாதுங்கற ஒரு ஆணாதிக்க சிந்தனை இருக்கும். புத்தியில்லாத பொண்ணுன்னா நாம சொல்றதைக் கேப்பா. எப்பவுமே நம்மை விட ஒரு ஸ்டெப் கீழே பொண்ணு இருக்கணுன்னு நினைக்கறவங்களோட மனநிலை இது.

    இன்னும் சிலர் என்னன்னா புத்திசாலிப் பொண்ணுன்னாலே "சுயமான பொண்ணு" ன்னு நினைக்கிறாங்க. அதாவது தனியா வாழறதுக்கு அவளுக்கு பயம் கிடையாதுங்கற நினைப்பு இருக்கும். அதாவது தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலை அவளுக்கு இல்லை எனும் சிந்தனை. ஒருவேளை நாம பண்ற டகால்டி வேலையெல்லாம் தெரிஞ்சுபோச்சுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போனாலும் போயிடுவாளோங்கற பயம் இருக்கும். அந்த பயத்துல "எதுக்கு புத்திசாலிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு" என பின் வாங்க வாய்ப்பு உண்டு.

    பசங்கதான் இப்படின்னா, பசங்களோட அம்மா, அப்பாக்கள் இன்னும் ஒரு படி மேலே. கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கும்போ "பொண்ணு பையனை விட அதிகம் படிச்சிருக்கா. பையனுக்கு அடங்கி இருக்க மாட்டா" என பில்டப் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். "தான் கம்மியா படிச்சதனால தான் கணவனுக்கு அடங்கி இருக்கிறோம்" என நினைக்கிறார்களோ என்னவோ ? அது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.



    இந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இணையா படிச்சிருக்கிற பெண்களை விரும்புகிறார்கள். அதாவது கம்ப்யூட்டர் படிச்ச பையன் அதே லைன்ல படிச்ச பொண்ணை விரும்புகிறான். இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி, இந்த வேலையில உள்ள கஷ்டம் இதே வேலையில இருக்கிற இன்னொருத்தருக்குத் தான் தெரியும்ங்கற மனநிலை. இன்னொன்னு தெரிஞ்ச ஏரியாங்கறதனால வேலை வாங்கிக் கொடுக்கலாம்ங்கற எண்ணம்.

    பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு வெச்சுக்கோங்க, புத்திசாலிப் பொண்ணை முடிஞ்ச மட்டும் அவாய்ட் பண்ணுவாங்க. கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவங்க வாழ்க்கைல சிக்கல் வர வாய்ப்பு அதிகம். "ஏங்க, இப்படி பண்ணியிருக்கலாமே" ன்னு ஒரு சின்ன கருத்து சொன்னா கூட "ரொம்ப படிச்ச திமிரு. அதனால நான் செய்றதெல்லாம் தப்பா தெரியுது". என எகிற ஆரம்பித்து விடுவார்கள். உண்மையிலேயே மனைவி சொல்வது சரியா தப்பா என்றெல்லாம் ஆராய அவர்கள் முயல்வதில்லை.

    "ஆண்கள் தங்களை விடப் புத்திசாலித்தனமான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயங்குவார்கள்" என்கின்றனர் சில உளவியலார்கள். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்த ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பல வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னால் அறிவார்ந்த பெண்கள் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. பல ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள்.

    பெண் புத்திசாலியாய் இருப்பது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஆனால் என்ன, "தான் புத்திசாலி" எனும் தற்பெருமையை உச்சந்தலையில் ஒட்டி வைக்காமல் இருக்க வேண்டும். தம்பதியர் தங்களோட ஈகோவை மூட்டை கட்டி வெச்சுட்டு, அன்பா பழக ஆரம்பிச்சா பிரச்சினைகளே வராது என்பது தான் நிஜம்.
    Next Story
    ×