search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கணவன் மனைவிக்குள் சண்டை வர இது தான் காரணம்
    X

    கணவன் மனைவிக்குள் சண்டை வர இது தான் காரணம்

    கணவன் மனைவி இருவருக்குள் ஏற்படும் சின்ன சின்ன விரிசல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது சரி செய்து கொள்வது அவசியமாகும்.
    திருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும் வரை உடன் வரக்கூடிய ஒன்று. இதில் ஏற்படும் சின்ன சின்ன விரிசல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது சரி செய்து கொள்வது அவசியமாகும். இல்லை என்றால் மொத்தமாக விரிசல் விழுந்து விடும்.

    கணவன் மனைவிக்குள் உண்டாகும் விரிசல்கள் அவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. எனவே கணவன் மனைவிக்குள் வரும் விரிசல்களை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவற்றை சரி செய்து எப்படி ஒருவரை ஒருவர் ஆதரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.

    பெரும்பான்மையான தம்பதிகளுக்குள் இந்த பணம் பெரும் பிரச்சனையை உருவாக்குகிறது. கணவன் போதிய பணம் சம்பாதிக்காமல் இருப்பது, மனைவி அதிகமாக செலவு செய்வது, அல்லது வீட்டின் தேவைகளுக்கு போதிய வருமானம் இல்லாமல் போவது ஆகிய நிதி பிரச்சனைகள் கணவன் மனைவி உறவில் பெரிய விரிசலை உண்டாக்குகிறது.



    குழந்தைகள் படிப்பில் குறைவான மதிப்பெண்களை எடுப்பது, ஒழுக்கம் இல்லாத செயல்களை செய்வது, அதிகமான குறும்புத்தனங்களை செய்வது ஆகியவற்றால் கணவன் மனைவிக்குள் மோதல்கள் உண்டாகிறது.

    போதுமான அளவு உடலுறவு இல்லாமை மற்றும் கருவுறாமை போன்ற உடலுறவு சார்ந்த பிரச்சனைகளால் தம்பதிகள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது தம்பதிகள் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது.

    அதிக வேலை பழு, தாமதாக வீட்டிற்கு வருவது இதனால் கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேச போதிய நேரம் ஒதுக்காமல் இருப்பது ஆகியவை தம்பதிகளுக்குள் பிரச்சனையை உண்டாக்குகிறது.



    கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது போன்ற சண்டைகள் வருகிறது. ஒருவரே அதிகப்படியான வேலைகளை செய்வது, மற்றவர் மீது வெறுப்பை உண்டாக்குவதாக இருக்கிறது.

    உங்களுக்கு இருக்கும் அனைத்து நண்பர்களும் உங்களது உறவை பலப்படுத்துபவர்களாக இருக்கமாட்டார்கள். சிலர் வேண்டும் என்றே ஏதேனும் சண்டையை உங்களுக்குள் உருவாக்கிவிடுவார்கள். அல்லது சண்டையை அதிகப்படுத்த தங்களால் முடிந்ததை செய்துவிடுவார்கள்.

    கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு பழக்கங்களை கொண்டிருப்பதும், கணவன் மனைவி இருவருக்கும் சண்டைகள் வர காரணமாக இருக்கிறது.

    குடும்பத்தில் உள்ள அண்ணன், தங்கை, மாமனார், மாமியார், என அனைவரும் கணவன் மனைவி உறவுக்குள் புகுந்து அடிக்கடி கருத்துக்கள் சொல்வதும், நாட்டாமை செய்வதும் பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.
    Next Story
    ×