search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே வீட்டு பராமரிப்பை அழகாக செய்யலாம்
    X

    பெண்களே வீட்டு பராமரிப்பை அழகாக செய்யலாம்

    பெண்கள் வீட்டை பராமரிக்க சில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது. வீட்டையும் அழகாக வைத்துக்கொள்ளலாம், வீட்டு பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.
    பெண்கள் வீட்டை பராமரிக்க சில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது. வீட்டையும் அழகாக வைத்துக்கொள்ளலாம், வீட்டு பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். இப்போது வீட்டை எப்படி பரமரிப்பது என்று பார்க்கலாம்.

    * சாப்பாட்டு மேசையில் தேவையற்ற பொருட்கள் வைக்கப்படுவதை தவிர்த்து விடலாம். டேபிளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. பல வீடுகளில் நாற்காலிகள் மீது ஈர டவல்களை உலர்த்த வைத்துப்பார்கள். அதையும் தவிர்த்து விடுவது அவசியம். ஊறுகாய், சாஸ், நெய், உப்பு, பொடிவகைகள் போன்றவற்றை அழகாக ஒரு டிரேயில் அடுக்கி ஓரமாக வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, எடுப்பதற்கும் எளிதாக இருக்கும்..

    * ஸ்டோரேஜ் கட்டில் படுக்கை அறையில் இருப்பது பல விதங்களில் வசதியாக இருக்கும். வாரம் ஒரு முறை ‘பெட்ஷீட்’ மாற்றுவதோடு, ஜன்னல் திரைகலையும் அடிக்கடி வாஷ் செய்வதில் கவனம் செலுத்துங்கள். படுக்கை அறை எளிமையாகவும், சுத்தமாகவும் இருந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். குளிர்சாதன வசதி கொண்ட படுக்கையறைக்கு நறுமண பொருட்கள் அவசியம். இதமான நிறத்தில் பெயிண்டு பூச்சு, சில மென்மையான ஓவியங்கள் ஆகியவை மனதிற்கு இதம் தரும்.

    * வீட்டின் மதிப்பை உயர்த்துவதில் ஹாலுக்கு பெரும்பங்கு இருக்கிறது. விலை உயர்ந்த சோபா செட், கம்பளம், சாண்டிலியர்கள், ஓவியங்கள் போன்றவற்றால் ஹாலை அழகு படுத்த வேண்டியதில்லை. இருக்கும் பொருட்கள் சுத்தமாக இருந்தாலே போதும். தூசிகள் படியாத சோபா, அழகிய விரிப்பு கொண்ட டீபாய், தொலைக்காட்சி பெட்டி அலமாரியில் கச்சிதமான பொருட்கள், பேப்பர்கள் மற்றும் மற்ற பத்திரிகைகளை நன்றாக அடுக்கி வைத்தல், மாதாமாதம் மாற்றப்பட்ட திரைத்துணிகள், விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றை 10 நாட்களுக்கு ஒரு முறை துடைப்பது போன்றவற்றோடு, பட்ஜெட்டுக்கு தக்கவாறு படங்கள், பூங்கொத்துக்கள் போன்றவற்றை ஆங்காங்கே வைத்தும் வீட்டை அழகாக்கலாம்.
    Next Story
    ×